Categories
மாநில செய்திகள்

தாத்தா பாட்டிக்கு உணவு கொண்டு சென்ற சகோதரர்கள்… மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…!!

கேரளாவில் விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா அருகே உள்ள செரியநாடு பகுதியை சேர்ந்த தம்பதியினர்  ஹரிதாஸ் – சுஜிதா. இத்தம்பதியருக்கு சண்முகம்(22) , அப்பு(18) என்கிற இரு மகன்கள் உள்ளனர். சுஜாதாவின் பெற்றோர்  செரியமங்கலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் சண்முகமும் அப்புவும்  உணவு கொடுப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலையில் சகோதரர்கள்  இருவரும் மோட்டார் சைக்கிளில் உணவு கொடுக்க சென்றனர். சண்முகம் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். செரியமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் சண்முகத்தின் கட்டுப்பாட்டை  இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சண்முகத்திற்கும் அப்புவிற்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும்  சிகிச்சை பலனின்றி  அண்ணன்-தம்பி  இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |