Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற இளைஞர்… எதிரெதிரே மோதி கொண்ட வாகனங்கள்… தூக்கி வீசப்பட்டதால் ஏற்பட்ட சோகம்…!!

தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை  சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் 21 வயதுடைய செல்வராஜ். செல்வராஜ்  கோவை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர்  தனது உறவினரை  பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி இரவு தன்னுடைய  மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம்  செல்வராஜின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு  படுகாயமடைந்தார். விபத்தை  ஏற்படுத்தி விட்டு அந்த வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்வராஜை  மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக செல்வராஜ்  கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் நேற்று காலை உயிரிழந்தார் . இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வாகன ஓட்டுநரை  காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |