Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய லாரி-வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கண்டெய்னர் லாரி-வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் சக்தி நகர் அருகில் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி மற்றும் வேன் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Categories

Tech |