கேஸ் வெடித்ததில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருக்கும் Southall பகுதியிலுள்ள கிங் வீதியில் இன்று காலை கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வணிக வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் தங்கள் எல்லாவற்றையும் இழந்ததாக வணிக உரிமையாளர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையில் இருந்து மீட்க 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 6 வாகனங்கள் வந்துள்ளதாகவும், ஒரு குழந்தை உட்பட 5 பேர் கட்டிடத்தின் பின் பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் 14 பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் எந்த பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இரண்டு பேர் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்து ஏற்பட்ட கடையின் உரிமையாளரிடம் நடந்தவற்றைச் சொல்ல பக்கத்து வீட்டில் வசிப்பவர் அழைத்தபோது அவர் இது குழப்பம் நிறைந்ததாக உள்ளது. யார் மாடியில் வசிக்கிறார்கள்? யாராவது காயம் அடைந்தார்களா? என்பது எதுவும் எனக்குத் தெரியாது. எப்போதும் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வந்தேன்.
தற்போது எனது கடை முற்றிலுமாக அழிந்து விட்டதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது மற்றொரு கடையின் உரிமையாளர் எனது கடை அதிர்ந்ததாக கூறுகிறார். அதோடு சிலர் காயமடைந்ததாகவும் கேள்விப்பட்டேன். இது அதிர்ச்சியாக உள்ளது எனக் கூறினார் தீயணைப்பு படையினர் விபத்து ஏற்பட்ட கடை முற்றிலுமாக சேதமடைந்து இருப்பதாகவும் சம்பவ இடத்தில் மேலும் 2 பேர் இறந்ததை உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர். இந்த விபத்து சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.