அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5000_த்திலிருந்து ரூ. 10,000_ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தின பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
ஓய்வூதியர்களுக்கு 2000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். துணை முதல்வரின் இந்த உத்தரவால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.