Categories
உலக செய்திகள்

என் தோளில் கைவைத்து…..தலையை முகர்ந்தார்…..ஆபாச ஆட்டம் போட்ட துணை ஜனாதிபதி…!!

 

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

 

இது குறித்து அவர் கூறுகையில் ,  நான் 2014_ஆம்ஆண்டு, நெவேடா மாகாணத்தின் துணை கவர்னர் பதவிக்க்கு தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது எனக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, ஜோ பிடென் வந்தார். நான் தேர்தல் மேடையில் ஏறுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஜோ பிடென் எனது பின்னால் வந்து, என்னுடைய தோள்கள் மீது அவரின் கையை வைத்து அழுத்தினார். எனது தலையை முகர்ந்தார். என்னுடைய பின்தலையில் முத்தமிட்டார்” என தெரிவித்துள்ளார்.  லூசி புளோரஸீன் இந்த குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

இந்த குற்றசாட்டு மீதான பரபரப்பு அடங்குவதற்கு முன்பு ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் எழுப்பியுள்ளார். எமி லேப்போஸ் என்ற 43 வயது பெண் ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளராக இருந்தார். எமி லேப்போஸ் கூறுகையில் , 2009_ஆம் ஆண்டு, கனெக்டிகட் மாகாணத்தின் ஹார்ட்போர்டு நகரில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நாடைபெற்றது. அப்போது அந்த இல்லத்தில் உள்ள சமையல் கூடத்தில் நாங்கள் இருந்தோம். உதவியாளராக இருந்த எங்களுக்கு நன்றி கூறுவதற்காக ஜோ பிடென் அங்கு வந்தார். அப்போது அவர் தன்னுடைய இரு கைகளையும் எனது முகத்தில் வைத்து அழுத்தி, அவருடைய  மூக்கால் என்னுடைய மூக்கை உரசி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

 

இந்த இரண்டு பாலியல் தொடர்பான புகார்களும் அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கூறிய  ஜோ பிடென் இந்த குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்து அவர் கூறும்போது, என்னுடைய பொதுவாழ்கையில் எத்தனையோ பேருடன் கை குலுக்கி இருக்கிறேன். எத்தனையோ பேரை தழுவி இருக்கிறேன்.என்னுடைய அன்பினையும் , ஆதரவையும் , ஆறுதலையும் வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் எந்த ஒரு  பெண்ணிடமும் இப்படி நான் தவறாக நடந்து கொண்டது இல்லை என்று மறுத்துள்ளார்.

Categories

Tech |