இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி புறப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கடந்த மாதம் 30ஆம் தேதியன்று செனகல் கத்தார் மற்றும் கபோன் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். முதல் முறையாக அவர் இந்த மூன்று நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். அதன்படி முதலில் கபோனுக்கு சென்று அந்நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் தலைவர்களுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம் தேதியன்று செனகல் நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு அந்நாட்டு அதிபர் மேக்கி சால்லுவை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து பேசியிருக்கிறார். அதன்பிறகு இறுதியாக கத்தார் நாட்டிற்கு சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியாக இருக்கும் ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியுடன் பேசினார். இந்நிலையில் நேற்று வெங்கையா நாயுடு அரசுமுறைப் பயணத்தை முடித்துவிட்டு தன் மனைவியோடு டெல்லி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.