பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை இரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 பிரபலங்கள் எழுதி இருந்தனர்.
அதில் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் , ஜெய் ஸ்ரீ ராம் , கும்பல் தாக்குதல் என பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குநர் மணிரத்தினம் உள்பட கடிதம் எழுதிய 49 பேர் மீதும் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் தேசத் துரோகம் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்க்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் , இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு லட்சம் பேரின் கையொப்பங்களோடு பிரதமருக்குக் கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.