ஸ்பெயின் நாட்டின் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று ஸ்பெயின்.
இதுவரை ஸ்பெயினில் ஆயிரத்து 772 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 28 ஆயிரத்து 768 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஸ்பெயின் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதன் காரணமாக கொரோனா நோயாளிகள் பலர் தரையில் படுத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் மிக விரைவாக செயல்பட வில்லை என்றால் அவர்களது நாடுகளும் இதே நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
https://twitter.com/BeeNewsDaily/status/1241842137702031361