விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்துவீர்கள். அன்னையின் ஆதரவால் துணிவுடன் செயல்களில் இறங்கி வெற்றி காண்பீர்கள். இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் பெறுவீ ர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற விடாமல் படிக்க வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
விளையாட்டில் ஆர்வம் செல்லும். சக மாணவருடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியர்களை நீங்கள் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. கூடுமானவரை அனுசரித்து செல்லுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய புதிய முயற்சியில் வெற்றியும் கிடைக்கும்.
இன்று ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளக்கூடிய நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்