இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது. இதனை எதிகொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இசாந்த் சர்மா 5 , முகமது ஷமி , ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 343 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 26.5 ஓவரில் 100 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் பும்ரா 5 , இசாந்த் சர்மா 3 , முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.