முன்னது வெறி பின்னது வீரம் நீங்கள் யார் பக்கம் என்று கமல் மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் கட்சியினரும, எதிர்க்கட்சியினரும் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டனர். நடிகர் ரஜினி கட்சியிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தனது கட்சியின் பரப்புரையை தொடங்கி வருகிறார்.
இதையடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், “எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நடிக்கிறார்கள். எதையாவது செய்தாக வேண்டும் என துடிப்பவர்கள் நாடு காக்க துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்?” என்று மக்களிடையே கேள்வி எழுப்பி உள்ளார்.