நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் மயில்வாகனம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரீசியான கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பொட்டல் காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார்த்திகேயன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அவ்வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியின் மீது மோதி விட்டார்.
இந்த விபத்தில் கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு கார்த்திகேயனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.