மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.