Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற வாலிபர்… வழியில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மாரிச்செல்வம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் சாம் ஜோயல் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர்.

இதனையடுத்து நின்றுகொண்டிருந்த சதீஷ்குமார் மற்றும் சாம் ஜோயல் ஆகிய இரண்டு பேரும் இணைந்து அவ்வழியில் சென்ற மாரிச்செல்வத்தை திடீரென நிறுத்தி அவர் வைத்திருந்த செல்போன், ஏடிஎம் கார்டு மற்றும் 12,000ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிச்செல்வம் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறி செய்த சதீஷ்குமார் மற்றும் சாம் ஜோயலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |