உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கூடைப் பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட மழலைகளுக்கான தவழும் பந்தயத்தில் குழந்தைகள் அனைவரும் ஒரு பக்கத்திலிருந்து தவழ்ந்து மற்றொரு பக்கம் இருக்கும் தங்கள் பெற்றோர்களை அடைய வேண்டும்.
அந்த வகையில் இந்த போட்டி தொடங்கிய உடன் குழந்தைகள் மறுபக்கத்தில் இருந்து தங்கள் பெற்றோரை நோக்கி தவழ ஆரம்பித்தனர். அப்போது அங்கிருந்த ஒரு குழந்தை மட்டும் அழுதுக்கொண்டே வெற்றிக்கோட்டை நெருங்கும் நேரத்தில் மற்றொரு குழந்தை அழுத அந்த குழந்தையிடம் சென்று விளையாட தொடங்குகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1529876674254446592