Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்கள்…. வேண்டுகோள் விடுத்த மருத்துவர்…. வெளியான உருக்கமான வீடியோ….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுமாறு அதிலுள்ள சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் பல்கலைக்கழகமொன்றில் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து தற்போது காபூல் தலிபான்களின் வசமுள்ளதால் அங்கிருந்து தப்பிக்க நினைத்த மருத்துவர் அவருடைய மனைவியுடன் காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் சொந்த நாட்டினுடைய ஆதரவின்றி விமான நிலையத்திற்குள் செல்வது மிகவும் கடுமையாகவுள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த மருத்துவர் காபூல் விமான நிலையத்திலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காபூல் விமான நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 280 பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எங்களால் விமான நிலையத்திற்குள் செல்ல முடியவில்லை. மேலும் தங்களால் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரிபவர்களை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆகையினால் தங்களுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து இந்திய அரசாங்கம் தங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்று மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |