Categories
தேசிய செய்திகள்

அரை நிர்வாண உடம்பில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ; சபரிமலை சர்ச்சை பெண் விபரீதம்!

சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயன்று சர்ச்சையை உருவாக்கிய ரெஹானா பாத்திமா, தனது குழந்தைகளை தனது அரை நிர்வாண மேனியில் ஒவியம் வரையச் செய்து  அதை வீடியோ வெளியிட்டதற்காக வழக்கில் மாட்டியுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான இவர்  சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்ல முயன்று சர்ச்சையை உருவாக்கினார். இப்பிரச்னை தொடர்பாக  18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்போது, புதியதாக மற்றோரு சர்ச்சையில் பாத்திமா சிக்கியுள்ளார்.  அண்மையில்  தனது  இரண்டு (மகன், மகள்) குழந்தைகளை வைத்து  தன்னுடைய அரை நிர்வாண உடலில் ஓவியம் வரையும்படி செய்து அதை  வீடியோவாக யுடியூபில் வெளியிட்டுள்ளார். இது குறித்து குவிந்த புகாரால், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா போலீசார் பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை மின்னணு முறையில் பரப்புதல் மற்றும் குழந்தைகள் நீதிச்சட்டம் 75 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் மீது போக்சோ சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |