Categories
தேசிய செய்திகள்

திருமணத்துக்கு முன் வீடியோ எடுக்க தடை..!!

திருமணத்துக்கு முன்பு மணமக்கள் வீடியோ எடுத்துக் கொள்வதற்கு ஜெயின் குஜராத்தி சிந்தி சமூகத்தினர் தடை விதித்துள்ளனர்.

திருமணத்துக்கு முன்னதாக மணமகள் வெளியிடங்களுக்குச் சென்று இயற்கை சூழலில் படம் எடுத்து அதை வீடியோவாக தயாரிப்பதும்,புகைப்படம் எடுப்பதும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. திருமணத்துக்கு முன்பே ஜோடியாக இணைந்து படம் எடுத்துக்கொள்வதற்குத்தான்  தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்ப்பு  எழுந்திருக்கிறது. இது கலாச்சாரத்துக்கு எதிரான செயல் என்று ஜெயின் குஜராத்தி சிந்தி சமூக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

Image result for திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட்

மணமகள் ஊர்வலத்தின்போது அல்லது திருமண மேடையிலோ  பெண்கள் நடனம் ஆடவும் ஜெயின் குஜராத்தி சிந்தி சமூகத்தினர் தடைவிதித்துள்ளன.

Image result for திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட்

 

இளம் மணமக்கள் ஆர்வமிகுதியால் மேற்கொள்ளும் செயல்களால் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக மததலைவர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் திருமணங்கள் மணமுறிவு வரை சென்றுவிடுவதால் மணமகள் திருமணத்துக்கு முன்பு படங்கள் எடுக்க தடை விதித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |