பிரிட்டனில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த பெண் நண்பர்களின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டர் என்ற பகுதியில் 61 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் வீட்டில் ஏதோ ஒன்று வெடித்துள்ளது. அதனால் அவரது வீடு முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது. தங்களது கண் முன்னே தோழி உயிரிழந்ததை கண்டு அந்த பெண்ணின் நண்பர்கள் என்ன செய்வதன்று தெரியாமல் தவித்துள்ளனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 61 வயது பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியை சேர்ந்த 30 வீடுகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.