ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வீடியோவை பதிவு செய்து அதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் பிரபலமாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் பார்ப்போரை ஈர்க்கும் வண்ணம் இருப்பதால் வேகமாக பரவி வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சிறுமி ஒருவர் தான் செய்வதை எல்லாம் அவருடைய நாயும் அழகாக செய்கிறது.
அவர் தலைகீழாக வளைந்து வளைந்து குட்டிக்கரணம் அடிக்கிறார். அதேபோன்று அந்த நாயும் குட்டிகரணம் போடுகிறது. அவர் என்னென்ன செய்கிறாரோ அதை எல்லாத்தையும் அந்த நாய் செய்கிறது. இந்த வீடியோ பார்ப்போரை வெகுவாக ஈர்த்துள்ளது. இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த சுட்டி குழந்தையின் சாகசமும் அதைக் கேட்டு நடக்கும் அந்த நாயின் சாகசமும் காண்போருக்கு அழகாகவும், வியக்க வைக்கும் வண்ணமும் இருக்கிறது.
https://twitter.com/i/status/1360761684164415492