பள்ளியில் தன்னை கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்வதற்கு தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறி அழும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் அவரது 9 வயது மகன் குவார்டன் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை சமாதானப்படுத்த தாயும் அழுது கொண்டே எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனாலும் அந்த சிறுவன் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்கிறான். இதனை பார்க்கும் போது நமக்கே கண்கலங்குகிறது.
இந்த சிறுவன் தலை பெரியதாகவும், கை, கால்கள் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். இதனால் தன்னை பள்ளியில் இருக்கின்ற அனைவருமே கேலியும் கிண்டலும் செய்தது மட்டுமில்லாமல் கொடுமைப்படுத்துவதாக கூறி அந்த சிறுவன் கதறும் வீடியோ பார்க்கின்ற பலரது நெஞ்சங்களையும் உலுக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் #TeamQuaden என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிறுவனுக்கு ஆதரவாக ஊக்கமூட்டும் விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் இது போன்று பள்ளிகளில் நடப்பது வேதனையளிக்கிறது. சிலர் மாற்று திறனாளிகலாக இருந்தால் மாணவர்கள் அவர்களை கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதனால் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகவே அப்படி உருவத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவர்களை கிண்டல் செய்யாமல் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஆதரவாக இருங்கள்.
Just heartbreaking! This poor guy just wants to be treated like any other kid. As adults we can shrug off a bully but kids are sensitive and there is no place for it. It gets better Quaden! #TeamQuaden https://t.co/FVmdLSaMxd
— Mich Biz (@MichBiz1981) February 21, 2020
https://twitter.com/carlos_flores/status/1230752190119043073
Dear #Quaden We Love You & We Support You! ❤️💥❤️ #TeamQuaden
¡Estamos contigo! #QuadenBayles
🇲🇽🇺🇸❤️ https://t.co/4Ha9QPFhOw— Karla A (@KarlaAmezola) February 21, 2020