Categories
உலக செய்திகள் வைரல்

முடி வெட்டினால் கொரோனா பரவுமா?… அப்படின்னா அதுக்கும் நாங்க ரெடி…. சீனர்களின் புது யோசனை… வீடியோவ பாத்துட்டு நீங்களே சொல்லுங்க!

சீனர்கள் கொரோனா வைரஸ் தொற்றக்கூடாது என்பதற்க்காக தள்ளி நின்று கம்பால் முடிவெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே மக்கள் கொரோனா தங்களுக்கு வரக்கூடாது என்று பாதுகாப்பாக முகமூடி அணிந்து கொண்டும், விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.

Image result for A 'long-distance' haircut coronavirus

இந்தநிலையில், சீனாவில் சலூன் கடை ஒன்றில் முடிவெட்டுபவர் அருகில் நின்று வெட்டாமல் தூரமாக தள்ளி நின்று வெட்டுகிறார். ஆம், ஒருவேளை அவருக்கு கொரோனா வைரஸ் இருந்து அது நமக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தில் நீளமான கம்பில் முடிவெட்டும் இயந்திரம் மற்றும் சீப்பை பொருத்தி, தூரமாக நின்று கொண்டு முடி வெட்டும் இளைஞரின் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல மற்றொரு வீடியோவிலும் இரண்டு பேர் தூரமாக நின்று முடி விடுகின்றனர்.

இந்த வீடியோவில், முடி திருத்துபவர்கள் வாடிக்கையாளர்கள் என இருவருமே முகக் கவசம் அணிந்திருக்கின்றனர். இதை பார்த்து விட்டு சிரிப்பதா, திகைப்பதா, அதிர்ச்சியடைவதா, பரிதாபப்படுவதா  என்னசெய்வதென்றே தெரியவில்லை என பார்ப்பவர்கள் ஒவொருவருக்கும் கலவையான மனநிலையை இந்த வீடியோ ஏற்படுத்தி வருகின்றது.

Categories

Tech |