போரிஸ் ஜான்சன் வெளியிட்டதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதிவிட்டு இருப்பதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவில்,” 74 வருடங்களுக்கு முன் பிரிட்டன் இந்தியாவுக்கு செய்ததற்கு என்னை மன்னியுங்கள், இதனால் இந்தியர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்தியாவுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. வைரல் பதிவை ஆய்வு செய்து பார்த்த போது, இந்த ட்வீட் பதிவு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்டில் இருந்து பதிவிட்டது கிடையாது என தெரியவந்துள்ளது. மேலும் அது போலி அக்கவுன்ட் ஆகும்.
இருந்தாலும், போலி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பதிவு உண்மையென நம்பி அதனை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து உள்ளன. மேலும் வைரல் ட்விட்டர் பதிவினை ரீட்விட் செய்து, இந்தியாவின் பெருமையை போற்றும் தலைப்புகளுடன் பகிர்ந்து வருகின்றனர். போலி கணக்கின் விவரங்களில், “பிரிட்டன் பிரதமர் | அதிகாரப்பூரவமற்றது | எஃப்சி” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அக்கவுண்ட் ஜூலை 2020 வாக்கில் உருவாக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது. அந்த வகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிடம் மன்னிப்பு கோரியதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு போலி அக்கவுண்ட்டில் இருந்து பதிவிடப்பட்டு இருப்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.