தென்னாப்பிரிக்காவில் ஆபத்தான விஷப் பாம்புடன் அணில் தைரியமாக வம்புக்கு இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ தன்மை கொண்ட நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது.
அதேநேரத்தில் பாம்பும் அணிலை கொத்துவதற்கு முயல்கிறது. ஆனால் அணில் மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகிறது. அணில் வேண்டுமென்றே அருகில் சென்று பாம்பை சீண்டுகிறது. எப்படியாவது அணிலை போட்டு தள்ளிவிட வேண்டும் என பாம்பும் சீறிக்கொண்டு கொத்துவதற்கு முயல்கிறது. ஆனாலும் முடியவில்லை. பின் அந்த அணில் தனது உடலை பாம்பின் கண்ணில் இருந்து மறைப்பதற்கு அவ்வப்போது மணலை தன்மீது வாரி போட்டு கொள்கிறது.
விலகுவதாக முடிவு எடுத்தாலும் அணிலின் இம்சையால் பொறுமையிழந்த அந்த பாம்பும் ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக வேகமாக தாக்குவதற்கு சீறியது. ஆனால் அப்போது கூட பயமில்லாமல் பாம்பின் தாக்குதலில் இருந்து அணில் லாவகமாகத் தப்பியது அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இந்த அற்புதமான காட்சிகளை இணையத்தில் ஏராளமானோர் பார்த்து பார்த்து ரசிக்கின்றனர்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும்.. ஆனால் தம்மா துண்டு அணில் வம்புக்கு இழுப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
இதோ அந்த வீடியோ :