Categories
அரசியல்

தமிழக – கர்நாடக எல்லையில் விபத்து “கல்லூரி மாணவர்கள் பலி” பதைபதைக்கும் வீடியோ ….!!

முதுமலை தெப்பக்காடு – கக்கனல்லா சாலையில் கர்நாடக அரசு பஸ் மீது  பைக் மோதியதில் இரண்டு கல்லுாரி மாணவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் குண்டல்பேட் தெருகனாம்பி பகுதியை சேர்ந்தவர் கோகுல். அதே போல நஞ்சன்கோடு பகுதியை சேர்ந்த சோமன். 21 வயதாகிய இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கின்றனர். கோகுல் குண்டப்பேட் தனியார் கல்லுாரியிலும், சோமன் அரசு கல்லுாரியிலும் படித்து வந்தனர். இவர்கள் தங்களது நண்பர்கள் 10 பேருடன், ஆறு பைக்குகளில் ஊட்டி நோக்கி சென்றனர்.

தமிழக – கர்நாடக எல்லையான கக்கனல்லாவை இவர்கள் கடந்து தெப்பக்காடு நோக்கி வந்தபோது, கோகுல், சோமன் ஆகியோர் வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கர்நாடக அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த கோகுல், சோமன் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மசினகுடி இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகிறார்.

https://youtu.be/MGjToJxKDxs

Categories

Tech |