சேலம் மாவட்டம் வாழப்பாடி கொள்ளை காட்சியின் வீடியோவை போலீஸார் வெளியிட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தம்பம்பட்டியில் மர்மநபர் ஒருவர் மளிகை பொருள் குடோனில் தனது கைவரிசை காட்ட முற்பட்டார். இதனால் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
இதனால் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பின. நடந்த கொள்ளை முயற்சி குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை செய்து சிசிடிவி காட்சியை வெளியிட்டனர். இதன் மூலம் அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.