Categories
தேசிய செய்திகள் வைரல்

ஓடும் வெள்ளத்தில்… சடலமாக அடித்து செல்லப்படும் காட்டு யானை… வைரலாகும் துயர வீடியோ..!!

கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும்  மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை ஓன்று சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலம் பாலத்தில் இருந்து இந்த வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கையின் சீற்றம் காரணமாக மனிதர்களை விட காட்டு விலங்குகள் பேரழிவுக்குள்ளாவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |