தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “திரிஷ்யம் 2″படத்தில் நடிகை நதியா நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகை நதியா தான் திரிஷ்யம் 2 சூட்டிங்கில் இணைந்திருப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் படப்பிடிப்பிற்கு மேக்கப் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் திரிஷ்யம் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.