Categories
தேசிய செய்திகள்

வீடியோ: “கொடூரத்தின் உச்சம்” தந்தையை கொன்ற பாலியல் குற்றவாளி…. நீதி கேட்டு கதறும் பெண்…!!

பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்ணின் தந்தையை குற்றவாளி கொலை செய்த சம்பவம் நாடும் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஹத்ராஸில் 20 பெண் ஒருவரை கொடூரமான முறையில் நான்கு கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஹத்ராஸில் 2018 ஆம் வருடம் பெண் ஒருவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றவாளியான கௌரவம் சர்மா என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்போது ஜாமினில் வெளியே வந்த கௌரவ் சர்மா பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கதறி அழுதுள்ள வீடியோ காண்பவரை கண் கலங்க வைத்துள்ளது .

மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உத்தரபிரதேசம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. எனவே பாகிஸ்தானை போன்று இந்தியாவிலும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் போன்ற கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |