அனுமதி சீட்டு இல்லாதவரை அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.
காஞ்சிபுரம் அத்திவாரத்தார் வைபவம் இன்னும் 4 நாட்களில் நடைபெற இருக்கின்றது. இதற்காக அளவுக்கதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்காக உரிய பாஸ் இல்லாத நபர்களை அனுமதித்ததாக கூறப்படுகின்றது. அதற்க்கு அனுமதி அளித்த காவல் ஆய்வாளரை ஒருவரை கண்டிக்கும் விதத்தில் போலீஸ்காரங்கெல்லாம் திமிருதனமா பண்றீங்க என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையன் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/SeithisolaiT/status/1160173093085597696