Categories
உலக செய்திகள்

தப்பு யார் செஞ்சாலும் ஆப்பு தான்…! மேயர் வேட்பாளருக்கு அபராதம்… தூள் கிளப்பிய பிரிட்டன் போலீஸ் …!!

லண்டனில் ஊரடங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக லண்டன் மேயர் வேட்பாளர் உட்பட 4 பேருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மிக கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் லண்டனில் மேயருக்கான பிரசாரத்தின்போது கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக  கூறி மேயருக்கான வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேயர் வேட்பாளரான Brain Rose-க்கும் அவரது  அணியை  சேர்ந்த 4 உறுப்பினர்களும் தலா 200 பவுண்ட் அபராதத்தை காவல்துறையினர் விதித்தனர்.  Brain Rose கடந்த வெள்ளிக்கிழமை முதல் லண்டனில் பெருநகரங்களில் 15 நாட்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் ஊரடங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறாமல் கவனமுடன் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |