பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் 800 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனை கட்டுப்படுத்த பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக ஒன்றுகூட கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது . இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் West end- ன் Green Street என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விருந்து நடந்துள்ளது.
சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் அந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விருந்தை ஏற்பாடு செய்த நபருக்கு விதிகளை மீறிய குற்றத்திற்காக 10,000 பவுண்ட் அபராதம் விதித்தனர். மேலும் விருந்தில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் 800 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று Brook Mewsஎன்ற பகுதியில் உள்ள குடியிருப்பிலும் ஒரு விருந்து நடந்துள்ளது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பேருக்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 800 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்.