பிரிட்டனில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டவுடன் மக்கள் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் பின்பற்றமாட்டார்கள் என்று விஞ்ஞானி சூசன் மிச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி என்பவர் பிரிட்டன் அரசிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அது என்னவென்றால், பிரிட்டனில் தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் ஊரடங்கு விதிகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் .
பிரிட்டனில் உள்ள குடிமக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று பேராசிரியர் Jonathan-Van-Tam வலியுறுத்தினார். இந்நிலையில் விஞ்ஞானி சூசன் மிச்சியின் இந்த எச்சரிக்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கட்டுப்பாடுகளை சரிவர பின்பற்றமாட்டார்கள் என்று influenza தடுப்பூசி விநியோகத்திலிருந்து பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்புகளில் சுமார் 29% மக்கள் கொரோனாவுக்கு எதிராக நங்கள் தடுப்பூசி போட்ட பிறகு அரசின் கட்டுப்பாடுகளை குறைவாகத்தான் கடைபிடிப்போம் என்றும் 11% பேர் தடுப்பூசி போட்ட பிறகு அரசின் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர்.