Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடியோ வைத்து மிரட்டிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோ சட்டத்தில் கைது….!!

ஆபாச வீடியோவை எடுத்து பிளஸ்-1 மாணவியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காட்டுகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு, அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 பயிலும் 16 வயதுடைய மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி முருகன் அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்ததோடு, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனையடுத்து முருகன் வீடியோவை மாணவியின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். எனவே தனக்கு நடந்த கொடுமையை பற்றி மாணவி தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்.

Categories

Tech |