Categories
தேசிய செய்திகள்

வீடு புகுந்து பெண்ணை அலேக்காக தூக்கிய நபர்…. பின் மாலையும் கழுத்துமாக மகள் கொடுத்த டிவிஸ்ட்….. ஷாக்கான பெற்றோர்…..!!!!

தெலங்கானா சிர்சில்லா மாவட்டத்தில் ராஜண்ணா பகுதியில் வசித்து வந்த ஷாலினியும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டனர். இதற்கிடையில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, ஷாலினியை கடத்தியதாக ஜானி மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில், ஷாலினிக்கு வேறொருவருடன் நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த ஜானி வீடு புகுந்து ஷாலினியை கடத்தி உள்ளார். இந்நிலையில் மாலையும் கழுத்துமாக ஷாலினி வெளியிட்டிருக்கும் வீடியோவில் “தான் நலமாக இருப்பதாகவும், ஜானியை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் இம்முடிவை எடுத்ததாக கூறினார். அதே நேரம் அதிகாலையில் முகமூடி அணிந்து கடத்த வந்த ஜானியை அடையாளம் காண முடியாமல் போனதாக ஷாலினி வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |