கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் வழிகாட்டுதலின்படி, கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி பசுபதி தலைமையில், வட்டார சுகாதார அளவில் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி தலைமையில், மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு மருத்துவர் பிரசாந்த், புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி, நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.