கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்யும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனையை சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், அண்ணாமலை மற்றும் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பரிசோதனையில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமதி. லதா தெரிவித்துள்ளார்.