Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீடுகளில் பற்றி எரிந்த தீ …. பொருட்கள் எரிந்து நாசம் …. காவல்துறையினர் விசாரணை….!!!

குத்தாலம் அருகே  3 வீடுகளில் ஏற்பட்ட  தீ விபத்து  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு மெயின் ரோட்டில் வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகிய  இருவரின் கூரை வீடுகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது இவர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீ எதிரே உள்ள சுரேஷ் என்பவரின் கூரை வீட்டிற்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது. இதில் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம் ,வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவலறிந்த குத்தாலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ-க்கள் நிவேதா முருகன், ராஜகுமார் மற்றும் தாசில்தார் பிரான்சுவா ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி ,மளிகை பொருட்கள் காய்கறி ,உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Categories

Tech |