Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விடுதலை செய்யுங்க…. பாரதிய ஜனதா கட்சியினரின் போராட்டம்….நெல்லையில் பரபரப்பு…!!

கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரியான பொன். ராதாகிருஷ்ணனை விடுதலை செய்ய கோரி பா.ஜனதா தலைவரின் தலைமையில் போராட்டம் நடந்துள்ளது.

நெல்லை வட்டத்திலுள்ள வள்ளியூர் வட்டார நிர்வாகியான பாஸ்கர் தாக்கப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக் கோரி முன்னாள் மந்திரியான பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதனை கண்டித்து பா. ஜனதா தலைவரின் தலைமையில் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

அதில் நகர பொது செயலாளர்கள், மாநில பட்டியல் அணி செயலாளர், நெசவாளர் அணி மாநில செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட துணைத்தலைவர், மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர்கள், நகர துணைத் தலைவர்கள், விவசாய அணி முன்னாள் மாநில செயலாளர், செய்தி தொகுப்பாளர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |