Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இலவச பட்டா வழங்க வேண்டும்….. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட நிலமில்லாத தலித் மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் டிலைட்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து உதவி ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |