Categories
மாநில செய்திகள்

விக்டோரியா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!!

சென்னை தாம்பரம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தில் வசித்து வரும் செந்தில் என்பவரின் மகன் சதீஷ். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ வரலாறு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இதில் சதீஷ் கல்லூரி அருகிலுள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில் விடுதி அருகில் உள்ள பீட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து அறைக்கு சென்ற சதீஷ் காலை வரை கதவை திறக்கவில்லை. அறை எண் 104-ல் சதீஷ் உறங்கிகொண்டிருக்கிறார் என மாணவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நேற்று மாலை வரையிலும் அந்த அறையின் கதவு திறக்கவில்லை. இதன் காரணமாக சந்தேகமடைந்த மாணவர் விடுதியின் காப்பாளர் தர்மராஜ் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு மின்விசிறியில் சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. பின் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மாணவர் சதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |