தங்கும் விடுதியின் மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதியில் தூயவன் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தூயவனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த தூயவன் அந்த தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூயவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.