நல்ல பட வாய்ப்புகள் வரும் காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.
நான் 14 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன் , என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்ததால் சிறப்பாக செல்கிறது. இது வரும் காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான தி டர்டி பிக்சர் திரைப்படம் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்ததோடு பாராட்டுகளையும் விருதுகளையும் வாரி குவித்தது.
தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய கதை படத்திற்காக தேசிய விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார். தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நேர்கொண்ட பார்வை படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் வித்யாபாலன் ஒரு சிறப்பான தோற்றத்தில் நடித்துள்ளார்.