தென்னிந்திய திரையுலகில் ராசியில்லாதவராக பார்க்கப்பட்டு, பின் பாலிவுட் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் வித்யாபாலன், தற்போது மனிதக்கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவருகிறார்.தென்னிந்திய சினிமாக்களான தமிழ், மலையாள மொழிகளில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்ட பின், படத்தில்இருந்து விலக்கப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பெட்டி படுக்கையுடன் பாலிவுட் சென்ற அவர், தொடர் ஹிட்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் தோன்றி தேசிய விருதும் பெற்றார். பாலிவுட் சினிமா தயாரிப்பாளரான சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகியுள்ள அவர், தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.மனிதக்கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தற்போது நடித்துவருகிறார். இரு மொழிகளில் உருவாகும் படத்தை அனு மேனன் இயக்குகிறார்.
பிஸியான ஷுட்டிங் வேலைகளுக்கு மத்தியில் தனது கணவருடன் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தை பார்த்து ரசித்துள்ளார். இதுகுறித்த தனது முகநூல் பக்கத்தில், கமல்ஹாசன் – ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் எனது ஃபேவரைட் படமான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கணவர் சித்தார்த்துடன் இணைந்து மீண்டும் பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இதில், அந்தப் படத்தில் இடம்பெறும் சூப்பர்ஹிட் பாடலான ‘சுந்தரி நீயும்’ பாடலின் சிறு கிளிப்பிங்கையும் இணைத்துள்ளார்.