Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வித்யாசாகர் சிலை உடைந்த தடயத்தை அழிக்கும் போலீசார்” பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிப்பதற்கு  போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர் என  பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, கொல்கத்தாவில் நடந்த  வன்முறைக்கு காரணம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். கலவரத்தின் போது அவர்கள் தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  குண்டர்களை பாதுகாப்பதற்காக, சிலை உடைந்துள்ள பகுதியில் தடயங்களை அழிக்க முயற்சி செய்கின்றார்கள்.

Image result for Vidyasagar Statue Destroyed  Prime Minister Modi's Accusation!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கட்சியின்  குண்டர்களும் மேற்குவங்காளத்தை நரகமாக்கி விட்டார்கள். வித்யாசாகர் சிலையை உடைத்தவர்களுக்கு கண்டிப்பாக மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மம்தா பானர்ஜிக்கு விரைவில் தோல்வி கிடைக்க உள்ளதால் அவரது முகத்தில் விரக்தி தெரிகிறது. அதானால் தான்  அவர் என்னை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுகிறார். அத்தையும், மருமகனும் (மம்தா-அபிஷேக் பானர்ஜி) மேற்குவங்காளத்தை கொள்ளையடிப்பதில் அதிக  கவனம் செலுத்துன்றனர் . இவ்வாறு அவர் பேசினார்.

Categories

Tech |