Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… சமந்தாவுக்கு என்ன ஆச்சு….? நோயினால் இப்படி மாறிட்டாங்களே…. வேதனையில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற இரண்டு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா புத்தாண்டு வருவதை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய செல்பி புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதோடு முன்னேறி செல்க. நம்மால் முடிந்ததை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும்.

புதுசு மற்றும் ஈஸியான தீர்மானங்களுக்கான நேரம் இது. கடவுள் ஆசிர்வதிப்பார். ஹேப்பி 2023 என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில், சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் புஸ் புஸ்ன்னு இருந்த சமந்தாவின் கண்ணம் இரண்டும் சப்பி போய் இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வேதனைப்பட்டதோடு இதுவும் கடந்து போகும் சமந்தா நீங்கள் வருத்தப்படாதீர்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை சமந்தாவின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

 

Categories

Tech |