இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு துறைகள் மூடங்கி கிடக்கிறது. அதேபோல அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதனால் வீட்டில் முடங்கி கிடக்கும் கதாநாயகிகள், சிறிய வீட்டு வேலைகள், சமையல், செல்ல பிராணிகளுடன் விளையாடுவது, ஓவியங்கள் வரைவது போன்ற வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.
அந்தவகையில் ‘மாகமுனி’ பட நடிகை மஹிமா நம்பியார் தற்போது நேரத்தை செலவழிக்க தனது வீட்டில் உள்ள சுவரில் ஓவியம் வரையும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், “தனிமைப்படுத்திக் கொள்வதைப் பயன்படுத்தி, இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காசோ வெளியே வந்துள்ளார். நீங்களும் ஓவியராக மாறுவதற்கு உங்களுக்கு தேவை ஒரு சுவர், ஒரு பென்சில் மற்றும் உங்கள் திறமையைப் பாராட்டுவதற்கு ஒரு அம்மா’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் தமிழில் சாட்டை, குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், மகாமுனி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஐங்கரன், அசுரகுரு, கிட்னா உள்பட ஒருசில படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/B-RK00lH7Lr/?utm_source=ig_web_button_share_sheet