நயன்தாரா தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பங்கேற்றுள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், முன்னணி நடிகை சமந்தாவும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்களும் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நயன்தாரா தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கேரளாவிற்கு சென்று அவரது அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
https://www.instagram.com/p/CTztZoVhj_C/?utm_medium=copy_link