இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் நிலையில், ஜோடியாக அவர்கள் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாராவை, ரசிகர்கள் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கின்றனர். இவர் சுமார் 16 ஆண்டுகளைத் தாண்டி தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் நீடித்து கொண்டிருக்கிறார். கடந்த, 2015 வருடத்தில் வெளியான, “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். எனவே, இருவரும் ஜோடியாக பண்டிகை நாட்களில் தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு பறப்பது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவலால், வெளிநாட்டிற்கு செல்லாமல் இருந்த இவர்கள், தற்போது புத்தாண்டு கொண்டாட துபாய்க்கு சென்றிருக்கிறார்கள்.
Happy New Year 2022💥🎉😇 pic.twitter.com/U79qY3O1ln
— Nayanthara✨ (@NayantharaU) January 1, 2022
அங்கு, இவர்கள் எடுத்த புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டனர். அதனை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேட்டு வருகிறார்கள்.
தற்போது, விஜய் சேதுபதி நடிக்கும், “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தை, விக்னேஷ் சிவன், இயக்கி வருகிறார். இதில், நயன்தாராவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படம், பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று காதலர் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.